திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
திருச்சி, நவ.9 அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர். ப.குமார் கலந்து கொண்டு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் நடைபெறவுள்ள வாக்காளர் சேர்ப்பு முகாமில் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து சிறப்பான பணியாற்ற ஆலோசனைகள் மற்றும் மூன்று தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியல்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.