பெரியகண்டியம்மன் கோவிலில் மஞ்சள்நீராட்டு‌

0 254
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 10  மணப்பாறை அருகே புகழ்பெற்ற பெரியகண்டியம்மன் கோவிலில் மஞ்சள்நீராட்டு‌
விழா.
திருச்சி மாவட்டம், மனப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற பெரியகண்டியம்மன் கோவில் உள்ளது. பெரியகண்டியம்மன், பொன்னர் – சங்கர் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களை கொண்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பெருந்திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 8 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளான இன்று சத்தாவர்ணம் என்ற மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியகாண்டியம்மன் உற்சவமூர்த்தி கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு கோவில் முன்மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு ஆலய வெளிச்சுற்று உலா நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் மீது ஜமீன்தார்கள் அருட்பிரசாதமான மஞ்சள் நீரை ஊற்றினர். பின்னர் அனைவரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஒருவருக்கொருவர்‌ மஞ்சள் நீர் ஊற்றி மஞ்சள் நீராட்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து சாமி மீண்டும் கோவிலுக்குள் சென்றது. 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவின் நிறைவாக நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.