மணப்பாறையில் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஏப்.4 வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மணப்பாறையில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராகவும், வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன சோசங்கள் எழுப்பியதுடன் கோரிக்கை குறித்த வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளையும் கையில் ஏந்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மணப்பாறை பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.