திருச்சி மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி முகாம்
திருச்சி, ஏப்.4 திருச்சி மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு இரண்டாம் கட்ட ரேபீஸ் தடுப்பூசி முகாமை மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 23,000 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்ட நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் இனம் கண்டு பூஸ்டர் டோஸ் போடும் செயல்பாட்டினை மாநகராட்சி மய்ய அலுவலகத்தில் மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் பணியின் அவசர அவசியம் கருதி இம்மாநகராட்சியில் கோணக்கரை நாய்கள் கருத்தடை மய்யம், அம்பேத்கர் நகர் நாய்கள் கருத்தடை மய்யம், அரியமங்கலம் நாய்கள் கருத்தடை மய்யம், பொன்மலைப்பட்டி நாய்கள் கருத்தடை மய்யம் ஆகிய நான்கு மய்யங்களில் ABC/ARV பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் கடந்த நிதி ஆண்டில் (2023-2024) 11929 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்ட்டது. நடப்பு நிதி ஆண்டில் (2024-2025) 9841 தெருநாய்களுக்கும் ஆகமொத்தம் 21770 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியின் அவசர அவசியம் கருதி தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் பரோபரியாக சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் M/s. ANIMAL HELPING HANDS திருச்சி நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 43, 767 தெருநாய்கள் தற்போது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளதாக கணக்கெடுப்பு பணி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சிமாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 21, 770 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்டது, இந்நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் இனம் கண்டு 5000 தெருநாய்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் துணைமேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகர் நல அலுவலர் விஜய் சந்திரன், மண்டலத் தலைவர் துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொது சுகாதாரகுழு தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்