தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது…

0 76

திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் கடைவீதி பகுதியில் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆனந்த், இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான கார்த்திக் ஆகியோர் விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!