கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய இருவர் கைது

0 368
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் கொள்ளிடம் ஆற்றில் பொலிரோ பிக் அப் வாகனத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக கொள்ளிடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற கொள்ளிடம் போலீசார் அங்கு பொலிரோ பிக் அப் வாகனத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஸ்ரீரங்கம் தாலுக்கா பனையபுரம் குடித் தெருவைச் சேர்ந்த 43 வயதான மணிமாறன், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான பாஸ்கர் என தெரியவந்தது.பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் மணல் கடத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் இருவரையும் கைது செய்து ஸ்ரீரங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.