முசிறி அருகே கோழி திருடிய இருவர் கைது

0 391
Stalin trichy visit

திருச்சி, பிப்.14 திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த வெள்ளூர் சாலப்பட்டியை சேர்ந்த கோவிந்த்சாமி மகன் இளவரசன் (35), இவர் கோழி வளர்த்து வருகிறார், கோழிகளை தனது வீட்டின் வெளியே அடைத்து வைத்திருந்தை இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவில் வந்த இருவர் கோழிகளை பிடித்துள்ளனர். சப்த்தம் கேட்டு இளவரசன் கண் விழித்தவர் கூச்சலிட்டவாறு அவர்களை துரத்தியுள்ளார்.
அப்போது இருவரும் கோழி மற்றும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து இளவரசன் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் கோழிகளை திருட வந்தவர்கள் துளையாநத்தம் சேர்ந்த சக்தி (24) மேல வெள்ளூரை சேர்ந்த சுதர்சன் (25) ஆகிய இருவர் என தெரிய வந்தது.இதையடுத்து இருவரையும் முசிறி போலீஸார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.