பைக் மீது கார் மோதியதில் 2 பேர் படுகாயம்

0 305
Stalin trichy visit

திருச்சி, பிப்.14 திருச்சி மாவட்டம் முசிறியில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சின்னசாமி (52), இவர் அதே ஊரை சேர்ந்த ராமசாமி மனைவி செல்வி (60) இருவரும் பைக்கில் முசிறி துறையூர் சாலையில் நடராஜர் நகர் பகுதியில் சென்றுள்ளனர். பின்னால் வந்த கார் பைக்கில் மோதியதில் இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர், இவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சின்னசாமி முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கார் ஓட்டுநரான கோவை மாவட்டம் கீழக்கரை லட்சுமி நகரை சேர்ந்த பர்கித் மகன் ஜான் போஸ்கோ (42) என்பவர் மீது முசிறி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.