காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் : சத்துணவு ஊழியர் சங்கம் தீர்மானம்

0 268
Stalin trichy visit

திருச்சி, அக். 10  போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மையத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார் மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான் பொருளாளர் சுப்பு காலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியத்தை முறையாக வழங்க கோரியும், போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், பணி செய்யக்கூடிய சத்துணவு ஊழியர்களுக்கு அரசு துறை காலி பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு வழங்க கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தில் மகளிர் சுய உதவிகளுக்களிடம் இருந்து சத்துணவு மையத்தை சத்துணவு ஊழியர்களிடம் முறையாக வழங்க கூறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் குணா மஞ்சுளா மைக்கேல் தனலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.