திருச்சி ரயில்நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்
திருச்சி, செப்.21 நெல்லை -சென்னை இடையே வரும் 24 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு இன்று சென்னை முதல் நெல்லை வரை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் வந்த வந்தே பாரத் ரயிலை
திருச்சி ரயில்வே மண்டல கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர்.