வாரிசு சான்று வழங்க லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. ஆர்.ஐ கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கீழகல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் தனது தந்தையார் நல்லையன் இறந்தது தொடர்பாக வாரிசு சான்றிதழ் வேண்டி மணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாணிக்கம் விண்ணப்பம் செய்திருந்தார். வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக கல்பாளையம் VAOஇளவரசன் என்பவரும் மற்றும் RI முருகேசன் என்பவரும் ரூபாய் 12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்து தருகிறோம் என்று மாணிக்கத்திடம் சொல்லியுள்ளனர் லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணிக்கம் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கிறார் மாணிக்கத்தின் புகாரின்பேரில் டிஎஸ்பி திரு மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று 20 5 2022 மாலைஆறு மணி அளவில் RI முருகேசனும் விஏஓ இளவரசனும் மாணிக்கத்திடம் லஞ்சமாக பணம் பெற்ற போது கைது செய்யப்பட்டனர்