வீரப்பூர் புகழ்பெற்ற பெரியகாண்டியம்மன் பெரிய தேர் பவனி

0 490
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற பொன்னர், சங்கர், பெரியக்காண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில ஆண்டு தோறும்; மாசிப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த 2 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பெரியகாண்டியம்மன் பெரிய தேர்பவனி இன்று மதியம் நடைபெற்றது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியகாண்டியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதை அடுத்து பெரியகாண்டியம்மன் தேரில் வைக்கப்பட்ட பின்பு ஆயிரக்கணக்கானோர் பக்திப்பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் முன்பிருந்து புறப்பட்ட தேர் கோவிலை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர் சென்ற போது தேரின் மீது மலர் மாலைகளை பக்தர்கள் வீசி அம்மனின் அருள் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.