அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய வாகனம் பறிமுதல் : இருவர் கைது

0 244
Stalin trichy visit

திருச்சி, டிச.1  மணப்பாறை அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய இருவர் கைது. கிராவல் அள்ள பயன்படுத்திய வாகனம் பறிமுதல் .

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வளநாடு காவல் துறையினருக்கு அக்குளம்பட்டி பகுதியில் அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அக்குளம்பட்டி குளப்பகுதியில் அனுமதியின்றி JCP இயந்திரம் மூலம் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். உடனடியாக மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டர் ஒட்டுனர் மளுகபட்டியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் (27) மற்றும் JCP ஓட்டுனர் பாப்பாபட்டியைச் சேர்ந்த பழனிமுருகன் (35) இருவரையும் கைது செய்தனர்.

மேலும் மணல் அள்ள பயன்படுத்திய JCP மற்றும் 1. யூனிட் கிராவல் மணலுடன் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். ஓட்டுநர்  இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.