திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்ய மாட்டார்: ஆதவ் அர்ஜூனா பேட்டி

0 54
Stalin trichy visit

திருச்சி, ஏப்.13 திருச்சி கிழக்கு தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில் திருச்சி, தஞ்சை மார்க்கெட் சாலையில்அமைந்துள்ள கிழக்கு தொகுதி அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார்

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

விஜய் பிரச்சாரம் குடும்ப அலையாக மாறி உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் விஜய் ஜெயிக்க வேண்டும் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு வர வேண்டும் மாற்ற வர வேண்டும்.
இரண்டு கட்சிகளும் ஊழலை உருவாக்கியது சொன்னது எதுவும் செய்யவில்லை புது அரசியலை மாற்றத்திற்கான அரசியலை விஜய் எதிர்பார்க்கிறார்கள்.
அதனுடைய வெளிப்பாடு தான் நாங்கள் ஆட்சிக்கு முன்பு திருநெல்வேலி தூத்துக்குடி மக்களுடைய ஆதரவு ஒரே இடத்தில் லட்சக்கணக்கில் மக்கள்   ஆதரவை தெரிவித்துள்ளனர்.
நல்ல கருத்து நல்ல அரசு எப்படி இருக்க வேண்டும் என வெளிப்படையான அரசியல் எப்படி இருக்க வேண்டும் என வாக்குறுதிகளை கொடுத்துள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்

தமிழக முழுவதும் பிரச்சாரம் வலிமைக்கப்பட்டுள்ளது. வளைதளத்தில் எனது பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறார். மாவட்டம் முழுவதும் பிரச்சார மேற்கொள்ள ஒவ்வொரு பகுதியும் போக முடியாது.

தேர்தல் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்படும். சில பகுதிகளில் காவல்துறையிடம் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.  பிரச்சாரம் ரத்து செய்யப்படவில்லை சீராக போய்க் கொண்டிருக்கிறது. எடப்பாடி  – உதயநிதி பிரச்சாரத்தையும் பொது மக்கள் புறக்கணித்துள்ளனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் பிரச்சாரம் செய்ய வருவார். மக்கள் தேர்ந்தெடுத்தபின் எம்எல்ஏவாக ஒவ்வொரு தெருவாக நன்றி கூறச் செல்வார்… அதுவரை தெருத்தெருவாக சென்று பிரச்சாரம் செய்ய சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது..

ஜனநாயகன்பட விவகாரத்தில் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானதற்கு திமுக மற்றும் பாஜகவிற்கு தொடர்பு இருக்கிறது நான் மீண்டும் பதிவு பண்ணுகிறேன்.சினிமா துறையை தன்னுடைய ஊழல் பணத்தை வைத்துக் கொண்டு கட்டுப்படுத்துகிறார் உதயநிதி ஸ்டாலின். விஜய்க்கு மன அழுத்தத்தை கொடுப்பதற்காகவே படத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்..

Leave A Reply

Your email address will not be published.