திருச்சி மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
திருச்சி, ஏப்.14 திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை (ஏப்.15) சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளுவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் செல்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே திருச்சி வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (ஏப்.15) விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதால் மைய மதிப்பீட்டு பணி முகாம் நாளை (ஏப்.15) விடுமுறை என அறிவிக்க சார்ந்த முகாம் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தேர்தல் பணி ஆணை பெற்ற அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.