வக்பு சொத்துக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் : சையது முஹமத் ஹக்கீம் பேட்டி

0 378
Stalin trichy visit

திருச்சி ஜூன் 21 வக்பு சொத்துக்கள் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் – அஞ்ஜீமன் – இ- ஹிமாயத் – இ- இஸ்லாம் தலைவர் சையது முஹமத் ஹக்கீம் பேட்டி

வக்பு நிர்வாகத்தால் திருச்சி அரியமங்கலம் அஞ்ஜீமன் – இ- ஹிமாயத் – இ- இஸ்லாம் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு இடைக்கால நிர்வாகிகளை வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி அறிவித்துள்ளார். அதன்படி சையத்முகமதுஹக்கீம் தலைவராகக் கொண்டு நிர்வாகிகள் 6பேரும் மற்றும் இருவர் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி மரக்கடையில் பகுதியில் புதிதாக பொறுப்பேற்ற சையத்முகமதுஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைவர் சையத்முகமதுஹக்கீம்

முன்னாள் நிர்வாகிகளின் துணையோடு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர் போலி பத்திரங்களை தயார் செய்து பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,
இந்த சொத்துக்கள் மூலம் பெறப்படும் பொருளாதாரங்கள் சமூக சேவைக்கு, பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும், தற்போது பள்ளிவாசலுக்கு உட்பட்ட இடங்களில் குடியிருக்கும் மக்கள் தரை வாடகை செலுத்தி வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து வாடகை செலுத்தி குடியிருக்கலாம் வெளிநபரிடம் இது தொடர்பாக எந்த பண பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம், வக்பு வாரியத்திற்கு உள்ள சொத்துக்களை பார்வைக்கு கொண்டு வருவதுடன் அந்த இடங்களில் உள்ள கட்டிடங்களை புரைமைத்தும் புதிய கட்டிடங்களை ஏற்படுத்தியும் வருவாய் அதிகரிக்கும் சூழலை ஏற்படுத்தி அதன் மூலம் சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்களின் கல்வி, மருத்துவம், திருமணம் உள்ளிட்ட சமுதாய நற்பணிகள் செய்வது என தெரிவித்தார்.

பேட்டியின் போது நிர்வாகிகள் அப்துல்ரஜாக், அப்துல் சலாம், சாகுல்ஹமீது, அபுதாஹிர், ராஜ்முஹம்மது, அபிபுல்லா, ஷேக் முகமது கௌவஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.