மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மக்கள் போற்றும் மகேஸர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படி இன்று 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டு மக்களாகிய மதியழகன் விஜயலட்சுமி தம்பதியரின் மகன் சந்தானம் செல்வி ஆகியோரின் திருமணத்தை சமயபுரத்தில் தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்பித்தார்.
மக்கள் போற்றும் மகேஸர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று 43-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் அவர்களின் மனைவி திருமதி செந்தில் சத்யா அவர்கள் தெற்கு காட்டூர் முருகன் கோயில் திருக்கல்யாணம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து அன்னதானமும் வழங்கி சிறப்பித்தார்.
43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் தனது வார்டுக்குட்பட்ட பிலோமினாள் புரம் துவக்க பள்ளியில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு உலக ஒற்றுமை தினம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் கொண்டாடப்பட்டது, அதற்காக பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் J.E.நரசிங்கமூர்த்தி மற்றும் ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் அரசரடி விநாயகர் கோயில் தெருவில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்தல் பணியையும், காவேரி நகரில் ஜல்லிப்போட்டு சாலையை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த போது உடன் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்