முக்கொம்பு மேலணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கொள்ளிடம் பாலப் பணிகள் மற்றும் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து நேரிலும் , புகைப்படக் காட்சியினையும் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இன்று (15.10.22) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் எஸ். ராமமூர்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பழனியாண்டி, ந. தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
