வடி வாய்க்கால் மூடப்பட்டதால் விளைநிலங்களில் தேங்கும் தண்ணீர் – நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!
திருச்சி ஜீயபுரம் குழுமணி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. அப்போது சாலையின் ஓரமாக இருந்த வடிவாய்கால்கள் விரிவாக்க பணியின் போது முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது மழை பெய்வதாலும், பாசனத்திற்கு வரும் தண்ணீரில் ஒதுங்க இடமில்லாமல் வயல்வெளிகளில் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் வாழை விவசாயம் செய்த பெரியண்ணன் என்பவருடைய வாழை தோட்டம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வாழை மரங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்குவதால் அடுத்து எப்படி விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் இந்த வடி வாய்க்காலை சீரமைத்து தர வேண்டும் என ஜீயபுரம் மற்றும் கருப்பூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.