குடிக்க கூட தண்ணீர் வரல… புகார் செய்தும் நடவடிக்கை இல்ல…கலெக்டருக்கு கோரிக்கை!

0 471
Stalin trichy visit

திருச்சி கருமண்டபம் செல்வநகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக மாநகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் குடிநீர் வரியும் மாநகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செல்வநகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து நகராட்சியில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சமைப்பதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் அலைமோதுகின்றனர். திருச்சி நகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றியே தீருவோம் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள திருச்சி மாநகராட்சி நிர்வாகம் குடிநீருக்காக மக்கள் கஷ்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் செல்வநகர் பகுதியில் முறையான கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால் சாக்கடைநீர் தேங்கி இரவு நேரத்தில் அப்பகுதி மக்கள் கொசுத்தொலையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். மழைபெய்யும்போது அப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் சாலையில் தேங்கி குடியிருப்புக்குள் புகுந்துவிடுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவராசு உடனே நடவடிக்கை எடுத்து குடிநீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் கழிவுநீர் வடிகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.