தனியார் பல் மருத்துவமனையை கண்டித்துபெண் குடும்பத்தோடு சாலை மறியல்

0 444
Stalin trichy visit

திருச்சி, ஏப்.3  மணப்பாறையில் தனியார் பல் மருத்துவமனையை கண்டித்துபெண் குடும்பத்தோடு சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வெண்ணிலா. இவர் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பல் கிளினிக்கில் பல் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகின்றது. பல் சிகிச்சை முடிந்த பின் தலைவலி, காதுவலி, கண் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்ற நிலையில் மீண்டும் இன்று பல் கிளினிக்கிற்கு சென்று பல் சிகிச்சைக்காக போடப்பட்ட தையல் தொடர்பாக கேட்க சென்ற போது முறையான பதில் சொல்லாமல் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த பெண் தனது குடும்பத்தினருடன் சம்மந்தப்பட்ட கிளினிக் எதிரே கடைவீதி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.

பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.