திருச்சியில் நகை திருடிய பெண் கைது
திருச்சி, ஆக.4 திருச்சி பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் அகமது (வயது28), தன் தந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டை பராமரிக்க தன் தோழி உதவிகேட்டு, பொன்நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் வீட்டில் வேலைக்கு ஒரு பெண்ணை வைத்தார். இந்த நிலையில் கடந்த 31ம் தேதி அந்த பெண் வீட்டில் பையில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணத்தை திருடிச்சென்றார். இது குறித்து புகாரின் பேரில் செசுன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியை சேர்ந்த பானு(43) என்ற பெண்ணை கைது செய்தனர்.