திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் இளைஞர் உள்பட 2 பேர் பலி

0 394
Stalin trichy visit

திருச்சி, ஆக.4 திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டையை சேர்ந்தவர் பவனந்தம் (வயது40), இவர் நேற்று டிவிஎஸ் டோல்கேட் அருகே பார்சல் வேனை ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது அங்கு எந்த எச்சரிக்கை பலகை மற்றும் ஒலிப்பான்கள் இன்றி சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியின் பின் பகுதி மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த பவனந்தத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர் (50) மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து:  திருச்சி, பொன்மலை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் வினோத் (வயது25), இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே அதிவேகமாக சென்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வினோத் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.