கொள்ளிடம் ஆற்றில் பெண் எரித்துக் கொலை

0 461
Stalin trichy visit

திருச்சி, பிப். 5 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றில் உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் எரித்துக் கொலை. முகம் மற்றும் கை எரிந்த நிலையில் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் 10 வது கட்டை பகுதியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் தலை மற்றும் கை எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் குறித்து விசாரணை செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.

பின்னர் பெண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் கொலை செய்த பெண் யார். எந்த ஊரைச் சேர்ந்தவர். எப்படி இங்கு வந்தார். எதற்காக எரித்து கொலை செய்தனர். பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..

Leave A Reply

Your email address will not be published.