மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு…

0 437
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள மலையப்பரத்தில் மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழந்தார்.

 

லால்குடி அருகே ஆங்கரை மலையப்பபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி 51 வயதான பவானி. இவர் நேற்று மாலை தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக கிரைண்டரில் இருந்து பவானியை மின்சாரம் தாக்க, தூக்கி வீசப்பட்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறினார்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம்  குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.