திருச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

0 576
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மீனா. கட்டிட தொழிலாளியான மீனா நேற்று காலை நாகமங்களத்திற்கு வேலைக்கு செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்டு அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.

அப்போது திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்களத்திற்கு அருகே சென்ற போது திடீரென நாய் குறுக்கே வந்து உள்ளது. இதனால் செல்லத்துரை பிரேக் அடித்தால் இதில் பின்னால் அமர்ந்து இருந்தாள் மீனா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மீனா இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.