அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை கோரி : ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

0 127
Stalin trichy visit

திருச்சி, ஜன.12   திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயன்ற தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே வளையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி, இவரிடம் டிராக்டர் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு,அதிமுக பிரமுகர் மிரட்டுவதால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். தீக்குளிக்க முயன்ற நபரை அங்கிருந்த காவல்துறையினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி மாவட்டம், புலிவளம் அருகே வலையப்பட்டியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர்,
டிராக்டரை ஒட்டி பணம் தருவதாகவும் மேலும் 2 1/2 பவுன் நகையை பெற்றுக்கொண்டு அந்த நகையை திரும்பத் தராமலும் ட்ராக்டரையும் தராமலும் இருந்து வந்துள்ளார். மூன்று வருடங்களாக திருச்சி deputy கமிஷனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது டிராக்டர் மற்றும் நகைகளை மீட்டு தர கோரி தீக்குளிக்க முயன்றார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் என்பதால் ஏராளமான காவல்துறையினர்  குவிக்கப்பட்டிருந்தனர். உடனடியாக தீக்குளிக்க முயன்ற தனலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.