மகளிர் விடியல் பயண பேருந்து சேவை : அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர், ஜூலை 9 அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தில் அரியலூர் – திருமானூர் செல்லும் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண நகரப் பேருந்தை சாத்தமங்கல் வழியே தொட்டு இயக்குதலை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நீட்டிப்பு செய்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னய்யா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) நிர்வாக இயக்குநர் தசரதன் உள்பட பலர் உள்ளனர்.