ஓவர்சியர் தாக்கியதாக வாலிபர் போலீசில் புகார்
திருச்சி, ஜுலை 9 மணப்பாறை அருகே ஓவர்சியர் தாக்கியதாக வாலிபர் போலீசில் புகார்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (30). இவருக்கு தொகுப்பு வீட்டிற்கான பராமரிப்ப செலவிற்கு அரசு வழங்கும் தொகை வழங்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பணியின் தன்மை குறித்து மணப்பாறை ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் புவனேஷ்வரி சென்ற போது அங்கு ராமச்சந்திரனுக்கும் – புவனேஷ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் பணி மேற்பார்வையாளர் ராமச்சந்திரனை ஜாதி பெயரை சொல்லி செருப்பால் அடித்ததாக கூறி புத்தானத்தம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.