சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

0 18
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 8  திருச்சி மாவட்டம்,  தொட்டியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி கடந்த 28-0-2022 அன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முசிறி ஆரையாச்சி பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 42) என்பவர் சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் முசிறி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகரா ஜனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார். இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட் டப்பட்ட நாகராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்புகூறினார்.

Leave A Reply

Your email address will not be published.