மின்சாரம் தாக்கி இளைஞர் சாவு

0 462
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கோவத்தக்குடியில் உள்ள சித்தர் பீடத்தில் மின் மோட்டார் ஸ்விட்ச்சை போடும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

மண்ணச்சநல்லூர் அருகே கோவாத்குடி ஹரிசன தெரிவைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவரது மகன் 24 வயதான நந்தகுமார். இவர் கோவத்தகுடி கிராமத்தில் உள்ள கோரக்கர் சித்தர் பீடத்தில் உள்ள பூஜை அறையில் மின் மோட்டார் ஸ்விட்ச்சை போடும் பொழுது அதிலிருந்து மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிருந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.