அரசு- அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான (18 முதல் 44 வயதுகுட்பட்டவர்கள்) கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ராம்கணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.