பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக ஆன்லைனில் நடத்தப்படாது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்
திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில்பிளஸ் 2 பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும்.வகுப்பறைக்கு வந்தே மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது.தேர்வு தேதியை மாநில அரசே முடிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சுகாதாரத்துறை அறிவிப்பின்படியே தேர்வு தேதி உறுதி செய்யப்படும்.சென்னையில் மேலும் ஒரு பள்ளி மீது புகார் வந்துள்ளது. இந்த புகார் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பத்மா சேஷாத்ரி பள்ளி மீதான புகார் நிரூபணமானால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட மாட்டார்கள். விருப்பமுள்ள ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபடலாம்.மீண்டும் பப்ஜி விளையாட்டு ஆன்லைனில் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து சைபர் கிரைம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.