கருணைக் கொலை செய்துவிடுங்கள் முகாம் சிறையிலுள்ள இலங்கைத் தமிழர்கள் கதறல்

0 419
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றது, கள்ளத்தோணியில் தப்ப முயன்றது, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, ஹங்கேரி, நைஜீரியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 115 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இலங்கை தமிழர்கள்.இவர்களில் 70 இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கான வழக்கை முடித்து தங்களது குடும்பத்தினருடன் வாழ வழிவகைசெய்யவும், சொந்தநாட்டிற்கு அனுப்பிவைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசை வலியுறுத்தி நேற்றுமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படாதநிலையில் இன்று 2வதுநாளாக உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர்.8வருடங்களாக முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சென்ற அரசாங்கத்தின்மூலம் நீதிகிடைக்காதநிலையில், தற்போதைய அரசு உரியநீதியினை தரும் என்ற நம்பிக்கையில் விடுதலை உடனடியாக வேண்டும் என்றும், நீதிமன்றத்தால் விடுதலை அறிவிக்கப்பட்டும் சிறையில் உள்ள அனைவரும் வெளியே செல்லவேண்டும். சிறப்புமுகாமில் பல்வேறு சித்ரவதைகள் அனுபவித்துக்கொண்டிருப்பதாகவும், 8வருடங்களாக வழக்குமுடிக்கப்படாமல் விரைவில் முடித்துவிடுவோம் என்று பொய்களைக்கூறிவருவதாகவும், தங்கள் குடும்பத்தினருடன் வாழவழிவகைசெய்யவேண்டும்… இல்லாவிட்டால் இங்கேயே கருணைக் கொலை செய்து உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்துவிடும்படி கண்ணீருடன் தெரிவித்தனர் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கும் அவர்கள்மேலும் இழப்புகளை சந்திக்காதவாறு தமிழக முதல்வர் உரிய தீர்வை வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.