தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை

0 749
Stalin trichy visit

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (11.06.202l) காலை 9.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வருகை தந்து கல்லணையை பார்வையிட உள்ளார். காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.முன்னதாக நாளை டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் மற்றும் கல்லணையை முதல்வர் ஆய்வு செய்கிறார்.இதற்காக நாளை காலை சென்னையிலிருந்து காலை 8.30 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வரும் ஸ்டாலின் காலை 9.10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் கல்லணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து தஞ்சை மாவட்டம் பள்ளி அக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார். மதியம் வல்லம் அருகே உள்ளமுத்துவாரி பார்வையிடுகிறார். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் குடி மராமத்து பணிகளை ஆய்வு செய்ய உள்ள முதல்வர் மாலை 5 மணிக்கு திருச்சியிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் செல்கிறார். அவருடன் துரைமுருகன் செல்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.