திருச்சி அரசு மருத்துவமனையில் வளாகத்தில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கி வரும் 52வது வட்ட தி.மு.க. செயலாளர்
திருச்சி தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு தொடர்ந்து மதிய உணவு அளித்து வரும் 52வது வட்ட திமுக செயலாளர் பவுல் ராஜ் ….கொரோனோ நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் இரவு பகலாக நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வந்து செல்லும் சூழலை பார்க்க முடிகிறது.தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்,தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு ஆணைக்கிணங்க திருச்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு திருச்சி மாவட்ட தில்லைநகர் பகுதி 52 வது வட்ட திமுக செயலாளர் புத்தூர் S. பவுல்ராஜ் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் தி. முத்துச்செல்வம் முன்னிலையில் கழக நிர்வாகிகளுடன் நாள்தோறும் சுமார் 1000 பேருக்கு சத்துள்ள முட்டையுடன் கூடிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது பொது ஊரடங்கு முடியும் வரை நாள்தோறும் வழங்கப்படும் என கூறினர்.