திருச்சி நவல்பட்டு கரைரோடு தூர்வாரும் பணி – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

0 641
Stalin trichy visit

டெல்டா மாவட்ட விவசாயிகளின் சம்பா சாகுபடிக்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையை திறந்து விடும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைய சுமார் 65 கோடி மதிப்பீட்டில் தொடர்ந்து தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

டெல்டா பகுதிகளில் 647 இடங்களில் தூர்வாரும் பணிகளானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த ஜுன் 11ம் தேதி கல்லணை மற்றும் திருச்சி உய்யக்கொண்டான் புலிவலம் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில் இன்று திறந்து திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் செல்லும் நவல்பட்டு கரைரோடு பகுதியில் சுமார் 13 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தொடங்கி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.