மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை – திமுக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

0 42
Stalin trichy visit

திருச்சி, செப்.16 வெயில்ல போராடும் விவசாயிகள்…மின்வெட்டு பிரச்சனை… கண்டுகொள்ளாத அரசு– மக்கள் பிரச்சனையை திசைதிருப்பவே அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை – திமுக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் அமைந்துள்ள திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில், சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு CCB போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், அங்கீகாரத்தைப் புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெறப்பட்டதாக பி.டி.ஆர். அரசகுமார் மீது சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே, திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்திற்கு 5-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் வருகை தந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனை குறித்து திமுக வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்…

சோதனை என்ற பெயரில் வீட்டைப் பூட்டிக்கொண்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கும், அமைச்சரின் சட்ட ஆலோசகர்களான எங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அவருடைய உடல்நிலை மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்கக் கூட அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.
சோதனையின் போது வழக்கறிஞரை உடன் வைத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளில் தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. அதை மீறி அதிகாரிகள் செயல்படுவது கண்டனத்துக்குரியதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மின்வெட்டு மற்றும் விவசாயிகள் போராட்டத்தைத் திசை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் சர்வாதிகார ஹிட்லர் ஆட்சி நடப்பதைப் போன்ற சூழல் நிலவுகிறது. வரும் இடைத்தேர்தலில் திமுக மீது வீண் பழிகளைச் சுமத்தவே இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.

எத்தனை சோதனைகள் மற்றும் அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் சட்டம் மற்றும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு திமுக மீண்டும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்..

Leave A Reply

Your email address will not be published.