உறையூர் மாணிக்க விநாயகர் கோவில் 29-ஆம் ஆண்டு சதுர்த்தி விழா -பக்தர்கள் திரளாகப் பங்கேற்பு
திருச்சி, செப்.17 திருச்சி உறையூர் சௌராஷ்டிரா தெரு மாணிக்க விநாயகர் கோவில் 29-ஆம் ஆண்டு சதுர்த்தி விழா -பக்தர்கள் திரளாகப் பங்கேற்பு
திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 29-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
இந்நிகழ்வை திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்து தொடங்கி வைத்தார்.
கடந்த 14-ம் தேதி அன்று கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 108 சங்கு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பாஜக ஆன்மீக கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் G.D.தினகர் மற்றும் விழா குழு செயலாளர்களான C.கண்ணன், R.முத்துராஜர் ஆகியோர் தலைமையில், விழாக் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து விழாவை சிறப்பாக நடத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தீபாராதனையைத் தொடர்ந்து அன்னதானம் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மாலையில் ஸ்ரீ பக்த வீர விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் திருவீதி புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகரின் அருளைப் பெற்றனர்.