மண்ணச்சநல்லூரில் நியாயவிலைக்கடைகளில் நிவாரணப் பொருட்கள் விநியோகம் – எம்.எல்.ஏ கதிரவன் தொடங்கி வைத்தார்
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை எம்எல்ஏ கதிரவன் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தொடங்கி வைத்தார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதித்த ஏழை,எளிய மக்கள் பயன்பெரும் வகையில் தமிழக அரசு கொரோனா சிறப்பு நிதியாக ரூ 2 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறப்பு நிவாரண நிதியை எம்எல்ஏ கதிரவன் தொட்ங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பி. இளங்கோவன்,ஊராட்சிமன்ற தலைவர் உமாராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.