மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் கே. என் நேரு திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 2015 -16 ஆம் ஆண்டு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை நிதியிலிருந்து கட்டப்பட்டது. கடந்த 2016 ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இந்த அலுவலகத்தை பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருந்தார்.மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் முதன்முறையாக போட்டியிட்ட கதிரவன் 59,618 வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 10 நபர்களில் இடம் பிடித்தார். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர். சீ.கதிரவன் தனக்கென ஓதுக்கீடு செய்த சட்டமன்ற அலுவலகத்தை தூய்மைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும தலைவரும் எம்எல்ஏ கதிரவனின் தந்தையுமான சீனிவாசன், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.