மண்ணச்சநல்லூர் ஒன்றிய குழு கூட்டத்தில் எம்எல்ஏ கதிரவன் பங்கேற்பு:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் பங்கேற்றார்.மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு கூட்டம் நடைபெறுவது குறித்து அழைப்பு கடிதம் ஒன்றிய சேர்மன் சார்பாக சம்மந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்- சட்டமன்ற உறுப்பினர்- மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் துறை தொடர்பான அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் போன்ற மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய குழு கூட்டங்களில் பங்கேற்பது கிடையாது.
இந்நிலையில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அழைப்புக்கடிதம் கிடைக்கப்பெற்றதும் கூட்டத்தில் பங்கேற்று எம்எல்ஏ கதிரவன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒன்றிய குழு கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கிய எம்எல்ஏ கதிரவனுக்கு ஒன்றிய சேர்மன் ஸ்ரீதர், துணை சேர்மன் கேபிஏ.செந்தில், மூத்த ஒன்றிய கவுன்சிலர்கள் அம்பிகாபதி, ராஜ்மோகன் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஒன்றிய கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தனர்.

கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் கோவிட் 19 பெருந்தொற்று பரவல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் அவசர தேவையின் அடிப்படையில் 2021-22 ஆம் ஆண்டிற்கு 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் இருந்து பணிகள் தேர்வு செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.