முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுநாள் : திருச்சியில் ராஜீவ் காந்தி திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

0 805
Stalin trichy visit

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகை புரிந்துள்ளார்.திருச்சிக்கு வந்த அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு கீழே வைக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் உடனிருந்தனர்.அதன் பின்பு சுற்றுலா மாளிகை சென்ற அவர் கொரோனா குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.பின்னர் மாலை திருச்சி அரசு தலைமை மருத்துவமனை செல்லும் அவர் அங்கு ஆய்வு மேற்கொள்கிறார்.பின்னர் என்.ஐ.டி செல்லும் அவர் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைக்க உள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.