திருச்சி பள்ளியில் ஜன்னல் கம்பியை அறுத்து பணம் கொள்ளை – சிசிடிவி ஹார்டு டிஸ்க்கையும் திருடி சென்ற கொள்ளையர்கள்

0 934
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளி (குரு சிபிஎஸ்இ) ஒன்றில் இன்று காலை பள்ளி ஊழியர்கள் வழக்கமாக பணிக்கு சென்ற போது அறையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததுடன் சிசிடிவி கேமராவின் ஒயர்களும் அறுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து மணப்பாறை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்த போது ஒரு அறையின் ஜன்னல் கம்பியை மர்ம நபர்கள் அறுத்து விட்டு பின்னர் அறைக்குள் சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் உடைத்ததோடு மேஜை ட்ராயரில் வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கை கழட்டி எடுத்து சென்றதும் தெரிய வந்தது.

ஹார்ட்டிஸ்க் ஒயர்கள் மற்றும் ஜன்னல் கம்பியும் அருகில் இருந்த காட்டுப்பகுதியில் கிடந்தன. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்க ஹாட்டிஸ்க் – ஐ தூக்கி சென்றயிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பாறையில் தனியார் பள்ளியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.