சுடுகஞ்சி கொட்டியதில் 1½ வயது குழந்தை பலி

0 13
Stalin trichy visit

திருச்சி, செப்.17 திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் மேல செட்டி தெருவை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவரது மனைவி அன்னபூரணி. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகளும், 1½ வயதில் பவித்ராஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4-ந்தேதி அன்னபூரணி சமையல் செய்த பின்னர் சாப்பாட்டை வடித்து விட்டு மற்ற வேலைகளை கவனித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அங்கே தவழ்ந்து சென்று கொண்டிருந்த பவித்ராஸ்ரீ மீது வடிக்கப்பட்ட நிலையில் சூடாக இருந்த கஞ்சி கொட்டியது.

இதனால் கதறி துடித்த குழந்தையை பவித்ராஸ்ரீ திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பவித்ராஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.