விவசாய வயலில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு

0 127
Stalin trichy visit

திருச்சி, ஆக.7 மணப்பாறை அருகே விவசாய வயலில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு.
அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி அடுத்த உடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 42). இவரது தனது தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தபோது தோட்டத்தின் அருகில் இரை தேடி சுமார் 10 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று வருவதை கண்டு தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறிது நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பு பிடி கருவி உதவியுடன் மலைப் பாம்பினை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.