திருச்சியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 102வது பிறந்தநாள் விழா : அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை
திருச்சி,அக்.10 தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 102வது பிறந்தநாள் விழா – திருச்சியில் தவெக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-
சுதந்திர போராட்ட தியாகி அய்யா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா திருச்சி மாவட்ட இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகே சங்க தலைவர் வழக்கறிஞர் கோ. சங்கர் தலைமையில் செயலாளர் ஜெ. சிவபாலன் முன்னிலையில் நடைப்பெற்றது.
இதில் நிர்வாகிகள் பொருளாளர் முத்துவேல், துணை தலைவர் கோபிநாத், துணை செயலாளர் தீனதயாளன், நிர்வாக கமிட்டி தலைவர் கோபிநாத், ஆலோசனை குழு தலைவர் செல்வராஜ்,
மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் சக்திவேல் சத்தியமூர்த்தி, கண்ணையன்,சிவா,,,குசன், சுந்தரவடிவேல், சேகர்,மற்றும் சங்க வழக்கறிஞர்கள், தமிழ்நாடு பார்கவுன்சில் மெம்பர் ராஜேந்திர குமார்,
இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் வளர்மதி, வெள்ளமண்டி நடராஜன், தாவேக்கா நிர்வாகிகள் டேனியல் வழக்கறிஞர் புவனேஸ்வரி, சம்சாத் பேகம் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் k. N. நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன் அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தவேக மாநகர், புறநகர் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சக்திவேல்,பாமக மாவட்ட செயலாளர் பிரின்ஸ்,பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து,ஆம் ஆத்மி மாவட்ட தலைவர் வக்கீல் இளங்கோ
இதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் ஒண்டிமுத்து தலைமையில் பாஜகவினர் வருகை தந்து மலர் தூவி மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.