ஶ்ரீமங்கைபாகேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே மங்கலம் கிராமத்தில் உள்ள ஶ்ரீமரகதாம்பாள் உடனுறை ஶ்ரீமங்கைபாகேஸ்வரர் சிவன் கோவிலில் கார்த்திகை மாத 4-வது சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. அப்போது நடந்த யாக வேள்வியில் 108 வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் மூலவர் ஶ்ரீமங்கைபாகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கார்த்திகை சோமவார சிறப்பு பூஜையில் மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை சோமவார விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.