திருச்சி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகள் தொடக்கம்

0 231
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 28 தமிழ்நாடு முழுவதும் இன்று 10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 34 ஆயிரத்து 479 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையில் தேர்வு சார்பான கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அறி வுரை மற்றும் ஆலோசனை வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கல்வி மாவட்டங்களில் இன்று (மார்ச்.28) 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இத்தேர்வை திருச்சி கல்வி மாவட்டத்தில் 99 தேர்வு மய்யங்களிலும், லால்குடி கல்வி மாவட்டத்தில் 74 தேர்வு மய்யங்களிலும், சிறைச்சாலை தேர்வு மய்யம் 1 என மொத்தம் 173 தேர்வு மய்யங்களில் 17 ஆயிரத்து 523 மாணவர்களும், 16,956 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 479 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். திருச்சி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 720 சொல்வதை எழுதுபவரும், 231 பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர் 2 ஆயிரத்து 653 ஆசிரி யர்களும், 348 அலுவலக பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ள னர். திருச்சி வருவாய் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 8 தேர்வு மய்யங்களில் தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். திருச்சி மத்திய சிறையிலேயே தனித்தேர்வு மய்யம் அமைக்கப்பட்டு அங்கு சிறைவாசிகள் 40 பேர் தேர்வு எழுதுகின்றனர். இடைநிலை தேர்வுக்கு திருச்சியில் 2 வினாத்தாள் கட்டுகாப்பு மய்யங்களும், லால்குடி கல்வி மாவட்டத்தில் 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மய்யங்களும் என மொத்தம் 9 வினாத்தாள் கட்டுக்காப்பு மய்யங்களிலிருந்து 37 வழித்தட அலுவ லர்கள் ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் தேர்வுமய்யங்களுக்கு வினாத் தாள் சென்றடைய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களில் ஆயு தம் தாங்கிய காவர்கள். காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு தேர்வு மய்யத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Leave A Reply

Your email address will not be published.