மண்டை ஓடு எலும்புகளுடன் விவசாயிகள் போராட்டம்
திருச்சி, மார்ச் 28 பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக அரை நிர்வாணத்துடன் மண்டை ஓடு எலும்புகளுடன் விவசாயிகள் போராட்டம்வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் பகுதிகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்முதல் முகாமிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், சண்டீகரில் மத்திய அமைச்சா்கள் சிவராஜ் சிங் செளஹான், பிரல்ஹாத் ஜோஷி, பியூஷ் கோயல் ஆகியோா் அடங்கிய மத்திய குழுவுடன் விவசாயிகள் கடந்த புதன்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து போராட்டக் களத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த ஜகஜித் சிங் தல்லேவால், ஸ்வரண் சிங் பாந்தோ் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவா்களை பஞ்சாப் காவல் துறையினா் கைது செய்தனா். அதே வேளையில், கனெளரி-ஷம்பு எல்லைகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள் மற்றும் அவா்களின் கூடாரங்களை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா். இதனை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைந்த கூட்டம் நடைபெற்று வருகிறது .
இந்த கூட்டத்தில் மத்திய அரசு மற்றும் பஞ்சாப் அரசுக்கு எதிராக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணத்துடன் மண்டை ஓடு எலும்புகள் வாயில் வாழைப்பழம் வெளியிட்டவைகளை வைத்தும் தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனவும் போராட்டம் நடத்தினர் .
தொடர்ந்து அரை நிர்வாணத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது .